மீன் இறக்குமதி செய்து மீள ஏற்றுமதி செய்யப்படும் – அமைச்சர் மகிந்த அமரவீர!

Friday, September 16th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடை அகற்றப்பட்ட பின்னர் இலங்கையின் மீன்களுக்கான கேள்வி அதிகமாகவுள்ள போதும் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே உள்நாட்டு நுகர்வை பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்து அதனை மீள ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி வசதிகளுக்கென வழங்கப்படவிருந்த 150 படகுகள் மற்றும் மீன்பிடி உகரணங்களை இவ்வருடத்தின் இறுதிக்குள் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தற்போது மீன்பிடி மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பதற்கென பல செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தற்போது இந்தியாவுடன் இன்று இருதரப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டள்ளது. 300 மில்லியன் ரூபா செலவில் அம்பாந்தோட்டை கடல்வளத்தை பாதுகாக்கவெனவும் படகுகளை பெற்றுத்தரவுமே குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 280 மில்லியன் ரூபாவை உள்நாட்டு மீன்பிடி தொழிலாளர்களுக்கென நிவாரணமாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நவீன படகுகளை பெற்றுக்கொள்ளவும் பழுதடைந்த படகுகளை திருத்திக்கொள்ளவும் குறித்த நிதி பயன்படுத்திக்கொள்ளப்படவுள்ளது. அத்தோடு சுயத்தொழில் முய்றசியாளர்களை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச அளவில் மீன்பிடி அபிவிருத்தியை வளர்ச்சியடைய செய்யவும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் அரைவாசி பணத்தை அரசாங்கமே கொடுக்க தீர்மானித்துள்ளது. இது 20 ஆண்டுகளின் பின்னர் அரசாங்கம் பின்பற்றுகின்ற நடைமுறையாகும். மேலும் இலங்கையில் பிடிபடும் மீன்களில் 40 சதவீதமான மீன்களே உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன்பிடி தடை தகர்த்தப்பட்டள்ளது. இதன்காரணமாக இலங்கையின் மீன்பிடி அதிகரித்துள்ள போதிலும் அது தேசிய மீன் கொள்வனவை பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அதாவது மூன்றில் ஒரு பங்கு மீன்வளம் மட்டுமே சுயதேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது. இதன்காரணமாக மீன் உற்பத்தியை இலங்கையிலேயே அபிவிருத்தி செய்வதற்கென சர்வதேச நாடுகளிடமிருந்து மீன்களை இறக்குமதி செய்து பின்னர் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்காத வகையிலேயே குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோர்வே, ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். ஊள்நாட்டு மீன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீள ஏற்றுமதியை மேற்கொள்ள திட்டமிட்டள்ளோம். அத்தோடு 32 திணைக்களங்களின் அனுசரணையோடு குறித்த நாடுகளிலிருந்து விசேட மீன் வர்க்கங்களை இறக்குமதி செய்து அதனை நமது நாட்டினூடாக ஏற்றுமதி செய்வதன் மூலமாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடிவதோடு வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

மேலும்  தற்போது நூற்றுக்கு 40 வீதம் மட்டுமே சுயதேவைக்காக  மீன் பெற்றுக்கொள்ளப்படுவதனால் 2018 ஆம் ஆண்டில் அதனை 80 சதவீதம் வரையில் அதிகரித்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளது. அத்தோடு எமது அமைச்சினூடாக மட்டும் சுமார் ஒரு இலட்சத்து 25000 தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

08-1454921138-mahinda-amaraveera

Related posts: