மீனவர்கள் போன்று வேடமிட்டு தங்கம் கடத்திய இருவர் கைது!

மீனவர்கள் போன்று வேடமிட்டு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கங்களைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் சுமார் 5 கிலோ கிராமிற்கு மேற்பட்ட தங்க கட்டிகளை தலைமன்னாருக்கு மேற்கு பகுதியிலுள்ள கடற்பரப்பில் வைத்து மீன்பிடி படகொன்றின் மூலம் கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவரென்றும் மற்றையவர் சிலாவத்துறையைச் சேர்ந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.கடற்படையினருக்கு கிடைத்த விசேட தகவலினடிப்படையில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் யாழ்ப்பாணம் சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விரைவில் பதிலளிக்க வேண்டும்:இல்லையேல் அனைத்துத் தரப்...
மாதுளை விதை இறுகி 11 மாத குழந்தை பரிதாப பலியானது!
இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!
|
|