மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

Friday, October 28th, 2016

மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழான 11 கட்டளைகளை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அமைச்சர்  உரையாற்றினார்.  நாடு பூராகவும் உள்ள 116 களப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. நீரியல் வளங்களை விருத்தி செய்யவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கப்படும மீனைப் பாதுகாப்பதற்காக படகுகளில் குளிரூட்டி வசதிகளும் ஏற்படுத்தப்படவிருக்கின்றன.

இதற்கான 50 சதவீத உதவியை அரசாங்கம் வழங்க இருக்கின்றது. கடற்றொழிலாளர்களுக்கு நவீன  தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தரத்திலான மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

bc76661ace63caaf504a2f2f2e4b5159_L

Related posts: