மீதொடமுல்ல குப்பை மேட்டை விட அரசியல்வாதிகளின் உளக் குப்பைகள் விசாலமானவை  – ஞானசார தேரர் தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2017

அரசியல் தலைவர்களின் உள்ளங்களில் உள்ள குப்பைகள், மீதொடமுல்ல குப்பை மேட்டைவிட விசாலமானவை என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினமான கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மீதொடமுல்ல இடரில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றன. கிரியைகளின் சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் அவர்களுக்கும் இவர்களுக்கும் தற்போது உள்ளவர்கள் எனவும் பிரித்து கூற முடியாது. ஆகவே இதன் பின்னாவது இந்த கேவலமான அரசியல் முறையை நிறைவு செய்து நீலம், பச்சை, சிவப்பு எனப் பிரித்துப் பார்க்காமல் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: