மீண்டும் வறட்சி : அரச தலைவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு!

Friday, September 15th, 2017

கடந்த சில தினங்களாக நாட்டில் சில பகுதிகளில் பெய்துவந்த மழை படிப்படியாகக் குறைந்து வருவதால் மீண்டும் வறட்சியான காலநிலை ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இலங்கை வானிலை அவதானத் திணைக்களத்தின் நிபுணர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகள் விசேடமாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வறட்சி ஏற்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஆஸ்திரேலிய வானிலை அவதான பணியகமும் கடந்த ஜூலை மாதம் இதே எச்சரிக்கையை இலங்கைக்கு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: