மீண்டும் சொகுசு வாகனம்!

Tuesday, August 9th, 2016

அமைச்சர்களுக்கு மீண்டும் சொகுசு வாகனம் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவுள்ளது தொடர்பாக முஜிபுர் ரஹ்மானிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் –

அமைச்சர்களுக்கு அத்தியாவசிய பயணம் உள்ளது. எனவே அவர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது பற்றி கூறியுள்ளதாகவும், அவர் கூறிய விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts: