மீட்கப்பட்ட உடற்பாகங்கள் வேறு வழக்குகளுடன் தொடர்புடையது!

Tuesday, October 11th, 2016

அண்மையில் புலனாய்வுப் பிரிவினரால் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட உடற்பாகங்களில், சில வேறு ஐந்து வழக்குகளுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகிறது.

வழக்கு விசாரணைக்கான வழக்குப் பண்டல்களாக இலக்கமிடப்பட்டவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து சுமார் 26 உடல் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய உடல் பாகங்கள், அரசாங்கத்திற்கு உடமையான பொருட்களாகும்.அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தமை குறித்து, அரச சொத்துக்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தொடரப்படவுள்ளது.

றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன. உடல் பாகங்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் கொழும்பு மாவட்ட முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

malabe

Related posts: