மின் வெட்டு நேரத்தில் மாற்றம்!

Tuesday, October 18th, 2016

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த 15ஆம் திகதி முதல் இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்றிலிருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது.

எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதற்கமைய, காலை ஒரு மணித்தியாலமும் மாலை அரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைப் பெற்று அதனை மின் உற்பத்திக்கு பயன்படுத்தவுள்ளமையே இதற்கு காரணம் என, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய சுட்டிக்காட்டியுள்ளார்.

power

Related posts: