மின் உற்பத்தி வலயமாக சம்பூரில் 500 ஏக்கர் நிலம்!

Wednesday, November 30th, 2016

மின்சார சபைக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலம் சம்பூரில் இருக்கின்றது. அங்கு எத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, எனினும் மின்சக்தி எற்பத்திக்கா வலயமாக அதை ஒதுக்கி வைத்துள்ளோம். என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் நளின் பண்டார எழுப்பிய கேள்விகளுக்கு பரிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

செரவலபிட்டியவில் திரவ இயற்கைவாயு மின்நிலையம் அமைப்பதற்கு விலைமனு கோரப்பட்டுள்ளது. நுரைச்சோலை மின்நிலையத்துக்கு அடுத்தபடியாக நாட்டில் பெரிய மின்னிலையமாக இது விளங்கும். அம்பாந்தொட்டையிலும் எல்.என்.ஜி அமைக்கப்படும். அத்துடன், சூரிய சக்தி, புதுப்பித்தல் சக்தி ஆகிய வழிகளிலும் மின்உற்பத்தி செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மின்சார சபைக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் பம்பூரில் இருக்கின்றது. அங்கு எத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும், மின்சக்தி உற்பத்திக்கான வலயமாக அதை ஒதுக்கி வைத்துள்ளோம் – என்றார்.

samboor_CI

Related posts: