மின்சார இணைப்பை பெற்றுவதற்கு புதிய நடைமுறைகள் – பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர்!

Tuesday, January 10th, 2017

மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான செலவீனத்தை கட்டம் கட்டமாக செலுத்தும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கென விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி மின்னிணைப்பை பெற்றுக் கொள்ளும் போது பகுதியளவில் கட்டணத்தை செலுத்தி இணைப்பைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது .

50 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு இதனூடாக விசேட சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன் தவணைக் கட்டணம் மற்றும் அதற்கான காலம் என்பன குறித்து விரிவாக அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Electricity-270-626x380

Related posts: