மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

Tuesday, September 6th, 2016

வெல்டிங் வேலை செய்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ரஜீவ் (வயது 32) என்ற குடும்பஸ்தரே குறித்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, குறித்த குடும்பஸ்தர் கொக்குவில் பிடாரி கோவில் உள்ள மாடி வீட்டு பகுதியில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்த வேளையில் நேற்று (05) மாலை மின்சாரம் தாக்கியுள்ளது.  மின்சாரம் தாக்கிய குடும்பஸ்தரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.  குறித்த சடலம் தொடர்பான விசாரணையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

47266

Related posts: