மின்சாரம் தடைப்படும்!

Monday, March 5th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை

யாழ். பிரதேசத்தில் –

ஏ9 வீதியில் (புங்கன் குளத்திலிருந்து கச்சேரி நல்லூர் வீதி சந்தி வரை), பாரதி லேன், புங்கன் குளம் வீதி புகையிரத கடவை வரை, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, பேரின்பநாயகம் வீதி, காட்டுக்கந்தோர் வீதி, மாதகல, யம்புகோளப் பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம் ஆகிய இடங்களிலும்

வவுனியா பிரதேசத்தில் –

சாளம்பைக் குளம் கிராமம், தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம், நெளுக்குளத்திலிருந்து இராயேந்திர குளம் வரை, ஒமேகா லைன் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts: