மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்து!

Thursday, October 13th, 2016

நாட்டில் மின்சார பாவனை அதிகரித்துள்ளதால் செயற்திறனுடனும் சிக்கனமாகவும் மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன ..

நாட்டில் நாளாந்தப் பாவனைக்காக 40 மணித்தியால கிகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படுவதாகவும், வார இறுதி நாட்களில் சுமார் 30 மணித்தியால கிகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தவிர, நாளாந்த மின்சாரத்திற்கான கேள்வியில், சுமார் 15 வீதமான மின்சாரம் நீர்மின் உற்பத்தியின் மூலமே பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 51 வீதம் வரையிலேயே காணப்படுவதாகவும் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

save_elec-2

Related posts: