மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை!
Monday, October 3rd, 2016
அனைத்து துறைகளிலும் கட்டண அதிகரிப்பை கோரி மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கு 5 வீதத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி யினால் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமார சிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தள்ளனர்.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் வருடம் மார்ச் 31ம் திகதி வரை இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பை கோரியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும்,தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பாரிய தேவைப்பாடு காணப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்திருந்தார்
Related posts:
கபாலிக்கு எதிர்ப்பு: சென்னையில் ரஜினியின் உருவ பொம்மையை எரிப்பு!!
மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்றிரவு இலங்கைக்கு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
பாகிஸ்தானில் கோர விபத்து - 36 பேர் பலி!
|
|