மின்கட்டணம் ஒருபோதும் அதிகரிக்காது!

எக்காரணத்தை கொண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க, இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.
தற்போதுள்ள கட்டணங்களுக்கு அமைய இலங்கை மின்சார சபைக்கு, மாதமொன்றுக்கு ரூபா 850 மில்லியன் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தே, இலங்கை மின்சார சபை குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி !
வத்தளையில் பாரிய தீ விபத்து!
புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கையிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கை!
|
|