மின்கட்டணத்தைக் குறைத்தால் பரிசு!

அடுத்த சில மாதங்களில், மின்சாரப் பட்டியல் கட்டணத்தைக் குறைக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு, போட்டி முறையில் பரிசுகளும் வெகுமதிகளும் பல சலுகைகளும் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவிவரும் நெருக்கடி நிலைமையினை இல்லாது ஒழித்து, மின்சாரத்தைத் தட்டுப்பாடு இன்றிப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக, கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார். மேலும் இந்நெருக்கடி நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு, அவசர மின் உற்பத்தி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும், அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
மன்னாரில் ரூ. 1 கோடி பொறுமதியான ஹெரோய்ன் மீட்பு!
சீனப் பெண் இலங்கையில் கைது!
மலையக திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்தம் – அமைச்சரவை அனுமதி!
|
|