மாவட்ட செயலகத்துக்குள் வாகனங்கள் கொண்டு செல்லத் தடை!

Wednesday, November 8th, 2017

வவுனியா மாவட்ட செயலகத்துக்குள் வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை கொண்டு செல்வதற்கான தடையை தற்போதும் நீடித்து வருவது தொடர்பாக வவுனியா மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட செயலகத்தினுள் பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் நிலையில் காரொன்றில் வந்த நபரொருவர் அங்கு பறந்து கொண்டிருந்த தேசியக்கொடியை இறக்கிவிட்டு சென்றிருந்தார்.

இதனையடுத்து அந்த நபரை பொலிஸார் தேடிக் கைது செய்து விடுவித்திருந்தனர். இதன் பின்னராக மாவட்ட செயலகத்திற்கு சைக்கிள்கள் மற்றும் எவ்வித வாகனங்களையும் பொது மக்கள் உள்ளே கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் வீதியோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து சென்றே வயோதிபர், விசேடதேவைக்குட்பட்டோர் உட்பட அனைவரும் தமது கடமைகளைச் செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந் நிலையில் போதுமான இடவசதிகள் உள்ள வவுனியா மாவட்ட செயலகத்தில் வாகனங்கள் தரிப்பதற்கு இடம் ஒதுக்காத மாவட்ட செயலக அதிகாரிகள் வாகனங்களின் இலத்திரனியல் பணபரிமாற்று இயந்திரங்களைப் பொருத்துவதற்கு இடங்களை வழங்கி வருகின்றனர் எனவும் விசனம் தெரிவித்த மக்கள் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் போது இடம்பெற்ற சம்பவமொன்றுக்காக யுத்தகாலத்திலேயே இல்லாத நடைமுறையொன்றைத் தற்போது பின்பற்றுவது தொடர்பிலும் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related posts:

நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை - இலங்கை மோட்டார்...
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
பயிலுநராக அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியம...