மார்ச் 6 ஆம் திகதி அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி?

Thursday, February 22nd, 2018

உடனடியாக அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், பின்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தலினை நடாத்த கோரியும் நாடு முழுவதும் எதிர்ப்புப் பேரணிகளைமுன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 06ம் திகதி நுகேகொட பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்த பேரணியை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் கடந்த 20ம் திகதி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர் உள்ளிட்டோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம்எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த பேரணியினை மாவட்ட மட்டத்திலும் முன்னெடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அரசுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புதரப்பினரையும் தொடர்புபடுத்துவதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: