மாம்பழச் செய்கை தென்மராட்சியில் மும்முரம்!

தென்மராட்சியில் ஏற்றுமதிக்காக மாம்பழச் செய்கையை ஊக்குவிப்பதற்குச் சிறப்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மராட்சியில் ஏற்றுமதிக்கான மாம்பழச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாம்பழங்களை உற்பத்தி செய்து அவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நேர்க்கில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்துக்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குத் தற்போது மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக மாம்பழ உற்பத்தியாளர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் ஊடாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். 4 பரப்புக் காணியில் சுமார் 40 கன்றுகளை நட முடியும்.
மாம்பழ உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் 3 ஆண்டு காலம் வீணடிக்கப்படும் என்றோ, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றோ அச்சப்பட வேண்டும். மண்வளத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் கச்சான் போன்ற ஊடு பயிர்ச்செய்கை செய்வதற்கான ஏற்பாடுகளும் உண்டு.
மேலதிக விவரங்களை பிரதேச போதனாசிரியர் ஊடாகவும் அல்லது கச்சேரி , நல்லூர் வீதியில் உள்ள விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்ட அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.
Related posts:
|
|