மாமரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் படுகாயம்

Monday, May 15th, 2017

வீட்டின் மாமரத்தில் மாங்காய் பிடுங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தரொருவர் மாமரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். .

குறித்த சம்பவம் சனிக்கிழமை(13) காலை-10 மணியளவில் யாழ். மீசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீசாலைப் பகுதியைச்  சேர்ந்த செல்வராசா விஜயகுமார்(வயது- 50) என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த குடும்பஸ்தர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு புதிய சோதனை - தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச...
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சந்திப்பு – இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்த...
அடுத்த 36 மணித்தியாலங்களில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் - வடக்கிற்கு ஆபத்து என வளிமண்டலவியல் திணை...