மானிய மின்கட்டண விவரம் அறிவிப்பு!
Monday, October 10th, 2016
விளைநிலங்களுக்கு மானிய திட்டத்தின் கீழ் அறவிடப்படும் மின்சார கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தற்போதுள்ள மின் அலகு ஒன்றிற்கான 10ரூபா 80சதம் இனி இரவு 10மணி தொடக்கம் காலை 6மணி வரையான காலப்பகுதியில் 6ரூபா 80சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் பயன்படும் நேரத்திற்கமைய பாவனை மின் அலகுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாதாந்த நிரந்தரக் கட்டணமும் 600ரூபாவிலிருந்து 300ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண நடைமுறை ஓக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. விவசாயத்திற்கு மின்சார விநியோகம் மானியத்திட்டத்தின் கீழ் மின் அலகு ஒன்றிற்கான 10ரூபா 80சதம் இரவு 10மணி தொடக்கம் காலை 6மணி வரையான காலப்பகுதியில் பயன்படுத்தப்படும் மின் அலகு ஒன்றுக்கு 6ரூபா 80சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் பாவனை நேர அடிப்படையில் பயன்பாட்டு மின் அலகைக் கணிப்பதற்கு புதிய மின்மானிகள் இலங்கை மின்சார சபையால் இணைப்பு செய்யப்படும். இதற்கு விவசாயிகளிடம் இருந்து கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது. இலவசமாக இணைப்புச் செய்யப்படும். விவசாய நிலத்திற்கு மின்சார விநியோக மானிய மின் விநியோக திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு விவசாயிகள் உரிய படிவத்தில் விண்ணப்பித்து மின்சார சபையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|