மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு உபகுழு நியமிப்பு

Wednesday, January 24th, 2018

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் வளர்ச்சி கருதி மேலும் 7 பேர் கொண்ட உபகுழு உறுப்பினர்கள் நீதி மன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்

வழிபடுவோர் சங்க உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு இரு  வருடங்களாக இயங்கி வந்த மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகத்தா சபை நிர்வாகத்துக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது அதைத் தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட பெறுனர் குழு ஆலயத்தின் வளர்ச்சி கருதி மேற்படி உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது இரு குழுக்களையும் சேர்ந்த 13 உறுப்பினர்கள் இணைந்து ஆலயத்தை வழிநடத்தி வருகின்றார்கள் இதே வேளை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 7 தர்மகத்தாசபை உறுப்பினர்களுக்கெதிரான வழக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .


யாழ்.-கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மனித  உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு !
வலி.வடக்கில் கல் அகழ்வு தொடர்பில் தெல்லிப்பழையில் முறையிடலாம்!
சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் - ஜனாதிபதி
ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை!  
பிரெஞ்சுப் கூட்டுத் தளபதி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!