மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தோட்டக் கிணறொன்றினுள் விழுந்து தற்கொலை செய்த இளம் பெண்
Wednesday, April 20th, 2016மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை(17-) இளம் பெண்ணொருவர் தோட்டக் கிணறொன்றினுள் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறிப்பிட்ட இளம்பெண் குறித்த தினம் தனது வீட்டிற்குத் தோட்டக் கிணறொன்றினுள் விழுந்தே தற்கொலை செய்துள்ளார்.தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குப் பிரேதபரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி இளம் பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்ன ? என்பது தொடர்பில் இதுவரை தெரிய வராத நிலையில் மானிப்பாய்ப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
சுகாதார பரிசோதகர் போல் பாசாங்கு செய்து சங்கிலி அறுப்பு- கரணவாய் தெற்கில் சம்பவம்!
உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெறும் தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவ...
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு - வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வ...
|
|