மானிப்பாயில் 120 வீதிகளுக்கு மும்மொழிகளில் பெயர்ப்பலகை!

d.rood Thursday, January 11th, 2018

மானிப்பாயில் பிரதேச சபைகளுக்குட்பட்ட 600 வீதிகளில் 120 வீதிகளுக்கு முதற்கட்டமாக மும்மொழிகளில் வீதிப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பிரதேசசபை செயலாளர் சற்குணராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

வலி.தென்மேற்கு மானிப்பாய் பிரதேசசபை 25 கிராம அலுவலர் பிரிவினையும் மாதகல், பண்டத்தரிப்பு, மானிப்பாய், ஆனைக்கோட்டை ஆகிய நான்கு உப அலுவலகங்களைக் கொண்ட பிரதேசம் ஆகும். இப் பிரதேசம் 600 ற்கும் மேற்பட்ட வீதிகளைக் கொண்டது. பெயர் பொறிக்காத வீதிகளுக்கும் படிப்படியாக பெயர்ப்பலகை இடப்படும்.

இதேவேளை பிரான்பற்றில் தம்பித்துரைவீதிக்கு பதிலாக சுடலைவீதி என்றும் முல்லையடிவீதி என்பதற்குப் பதிலாக சென்மேரிஷ்வீதி எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே பெயர் மாறியுள்ள வீதிகளுக்கு பதிலாக அதன் உண்மையான பெயர் இடப்படும் என்றார்.