மானிப்பாயிலுள்ள முக்கிய வீதிகளை திருத்தக் கோரிக்கை!

Wednesday, December 14th, 2016

மானிப்பாயிலுள்ள முக்கியமான 3 வீதிகள் சேதமடைந்துள்ளன. அவற்றால் போக்குவரத்துச் செய்வது பெரும் சிரமமாக உள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் மிக முக்கியமான வீதிகளாகக் கருதப்படும் கனகசபை வீதி, சங்கரபிள்ளை வீதி, லோட்டன் வீதி ஆகிய 3 வீதிகளுமே போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு சேதமுற்ற நிலையில் காணப்படுகின்றன.

மாணவர்கள் உட்பட அதிகளவான மக்கள் பயன்படுத்திவரும் 3 வீதிகளும் படுமோசமாகச் சேதமடைந்தள்ளமையால் இ.போ.ச.பஸ் உட்பட வாகனங்களின் போக்குவரத்துக்கும் மக்களின் நடமாட்டத்துக்கும் இடையூறாகக் காணப்படுகின்றது. பொதுமக்கள் மாணவர்களின் நலன் கருதி 3 வீதிகளையும் விரைவாகத் திருத்தியமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களைக் கோரியுள்ளனர். வீதிகள் சீரமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் குறித்த 3 வீதிகளும் முன்னுரிமை அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

14627719_1836900433210274_1563021296_n

Related posts: