மாநகரப் பகுதியில் டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டில்!

Friday, November 4th, 2016

யாழ்.மாநகரப் பகுதியில் டெங்குத்தாக்கம் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் 5 பேர் மட்டுமே டெங்கினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகர சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது பருவமழை ஆரம்பித்திருப்பதால் அதன் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் சுகாதார பிரிவினர் தயாராகவுள்ளனர்.

மழை ஆரம்பித்துள்ளமையால் நுளம்புகளின் பெருக்கங்களும் அதிகரிக்கும். மக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதேசமயம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 9பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 12பேரும் மாநகர பகுதியில் அடங்கு தாக்கத்திற்குள்ளானதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

dengue-fever(C)

Related posts: