மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

Monday, September 19th, 2016

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி காட்டுப்பகுதியில்சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்றிரவு பொலிஸ்  விசேட  அதிரடி பிரிவினரால்குறித்த  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பலஉபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

thumb_large_gems-top-slider

 

Related posts: