மாணவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்!
Monday, July 25th, 2016காத்தான்குடி நகரில் இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் மாணவர்கள் இருவர் படுகாயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (24) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், காத்தான்குடி 5ஐச் சேர்ந்த அல் ஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எல்.எம்.அர்ஷாத் (வயது – 18) மற்றும் ஏ.எம்.எம்.ஹஷீப் (வயது – 17) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.
வீதியில் தம்மை வழிமறித்த இனந்தெரியாத கும்பல், கடத்திச்சென்று மறைவிடமொன்றில் வைத்து இரவு 11 மணிவரை சரமாரியாக தாக்கியதாக மாணவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். சுமார் 20 பேர் கொண்ட கும்பலே தம்மை தாக்கியதாக குறிப்பிட்டுள்ள மாணவர்கள், அவர்களை தம்மால் அடையாளம் காட்டமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ரயில் கடவை காப்பாளர்கள் போராட்டம்!
ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலிய...
அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் 3 ஆம் தவணை விடுமுறை - பெப்ரவரி 20 மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு ...
|
|