மாணவர்களின் பதற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Saturday, August 4th, 2018

இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படக்கூடிய பதற்றம் இலங்கையில் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதோடு பதற்றத்தினால் களைப்பாற மற்றும் சோம்பல் நிலை மக்கள் மத்தியில் ஏற்படுவதனால் செயற்றிறன் ஆற்றல் குறைவடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த நிலை ஏற்படுவதை தடுப்பதற்கான இரும்புச் சத்துக் கொண்ட குளிசைகளை வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று இதற்கு தீர்வாக பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட உணவுகளில் இரும்புச் சத்து விற்றமின்களை ஒன்று சேர்ப்பதன்மூலம் இதனைக் குறைத்துக்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அரிசி மற்றும் கோதுமை மாவில் இருமபுச்சத்து மற்றும் போலி அமிலத்தை ஒன்று சேர்த்து வலுவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: