மாகாண மட்ட தடகளப் போட்டியில் மாணவி பிரியங்கா 3 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை!
Monday, July 18th, 2016
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் மாகாண மட்ட தடகளப் போட்டியில் தட்சணாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி பி. பிரியங்கா 3 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தள்ளார்.
மாகாண மட்ட பாடசாலை தடகளப்போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றன. இதில் மடுவலயத்தை சேர்ந்த செல்வி பிரியங்கா எனும் குறித்த மாணவி, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி, 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம், 800 மற்றும் 1500 மீற்றர் ஓட்டம் போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றியே சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் முன்னயை சாதனைனை முறியடிக்கப்பட்டு, புதிய சாதனை குறித்த மாணவியினால் பதியபட்டுள்ளது.
மாணவி பிரியங்காவினால் நிலைநாட்டப்பட்ட குறித்த சாதனையானது, ஒரு அரிய சாதனையாக தாம் கருதுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டியுள்ளார்கள்.
இதுதவிர நடப்பாண்டில் மூன்று விளையாட்டுக்களில் களமிறங்கி மூன்றிலும் தங்கம்பெற்று சாதனையை நிலை நாட்டிய பெருமை நேற்று வரை மாணவி பிரியங்காவிற்கே உரித்துடையதாகும்.
எது எவ்வாறாக இருப்பினும், மாணவி பிரியங்காவின் இந்த சாதனையானது பல சவால்களுக்கு மத்தியில் படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|