மாகாண சபைத் தேர்தலை நடத்த தேவையான தீர்மானத்தை எடுக்குக – தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Saturday, January 19th, 2019

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான மாகாண சபைகளின் ஆயுட்காலங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மாகாண  சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு.

Related posts: