மாகாணசபை பதவியை ஜோன்ஸ்டனின் மகன் இழந்தார்!
Thursday, December 29th, 2016
வடமேல் மாகாண சபை உறுப்பினரான ஜொஹான் பெனாண்டோ, மாகாண சபையில் அவர் வகித்த பிரதான அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த முடிவை, வடமேல் மாகாண சபையின் ஆளும் தரப்பு ஏகமானதாக எடுத்துள்ளதாக சபையில் அறிவிக்கப்பட்டது.
ஐ.ம.சு.மு. மாகாண சபை உறுப்பினரான அவர், வடமேல் மாகாண சபையில், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு பதிலாக, வடமேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினர் பண்டார ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதியுடனான, 3 மாதங்களுக்கு மேலான மாகாண சபை அமர்வுகளில் பங்கெடுக்காத அவர், கடந்த 6 மாகாண சபை அமர்வுகளில் பங்கெடுக்கவில்லை என்பதோடு, மாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்திலும் பங்கெடுக்கவில்லை என்பதாலும் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யாமை காரணமாகவும் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஶ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், அவரை குறித்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பூரண சம்மதம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஜொஹான் பெனாண்டோ, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|