மஹிந்த தேசப்பிரிய சாட்சியம்!

Thursday, November 24th, 2016

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.  கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் நாடுபூராகவுமுள்ள விஹாரைகளுக்கு, சட்டவிரோதமாக சீல் துணி விநியோகித்த குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சட்சியமளிக்கவே மஹிந்த தேசப்பிரிய நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன்படி, நீதிபதி எம்.பி.கருணாதிலக்க முன்னிலையில் இவர் சாட்சியமளித்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் பொதுச் சொத்துக்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தன்னால் சுற்றறிக்கையொன்று வௌியிடப்பட்டதாக இதன்போது நீதிமன்றத்தில் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி அவரை குறுக்கு விசாரணை செய்த போது, விஹாரைகளுக்கு சீல் துணி விநியோகிப்பது குறித்து தனக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாக கூறினார். இதனைத் தடுக்க தன்னால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2088626579500

Related posts: