மஹிந்தவின் தலைமையில் பாதயாத்திரை ஆரம்பம்!

Thursday, July 28th, 2016

கூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பு நோக்கிய பாதயாத்திரை இன்று காலை ஒன்பது மணியளவில் கண்டி புறநகர் கெடம்பேயில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

கண்டி மாநகருக்குள் இருந்து பாதயாத்திரையைத் தொடங்குவது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக இந்த மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இப்பாத யாத்திரை கொழும்பை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: