மழையால் நெல் அறுவடை பாதிப்பு !

Wednesday, February 7th, 2018

யாழ் குடாநாட்டில் பரவலாக நேற்றுத் திடீரென பெய்த மழையினால் பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் இன்னும் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

என்றாலும் சில செய்கையாளர்கள் நேற்று இயந்திரம் மூலம் அறுவடை செய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென பெய்த மழையினால் நெற்பயிர்கள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டன. அதேவேளை வலி.கிழக்கில் சில இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வெய்யிலில் உலர வைக்கப்பட்ட வெங்காயங்களும் மழையில் நனைந்ததாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

Related posts: