மல்லாகம் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் கைது!
Monday, February 20th, 2017
மல்லாகம் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு ஆஜராகாமல் நீதிமன்ற கட்டளையை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சிறு குற்றச் செயல்கள், மோதல் சம்பவம் மற்றும் தாபரிப்பு வழக்குகளுடன் தொடர்புபட்ட இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது
கடந்த வழக்கு தவணைகளுக்கு ஆஜராகத் தவறிய மேற்படி ஜவருக்கு எதிராக நீதிமன்றினால் தெல்லிப்பழை பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த நபர்கள் வெவ்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதுபான போத்தல்களை மீள் சுழற்சி செயற்வதற்கு புதிய வேலைத்திட்டம் - கலால் திணைக்களம் நடவடிக்கை!
இன்று முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும்!
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது - ஜனாதிபதி கோட்டாபய ரா...
|
|