மலையக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதை ஏற்கிறேன் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023

நாட்டின் அந்திய செலாவணியை ஈட்டுவதில் பெரும்பங்காற்றும் மலையக மக்கள் பாரிய நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை தொடர்பான, சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர்களது பொருளாதார, சமூக நிலையை உயர்த்த வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளன. பெருந்தோட்டத்துறையில் காணப்படும் தரிசு நிலங்களை, அரசாங்கம் பொறுப்பேற்று அதனை மீண்டும் பெருந்தோட்டத்துறை மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.

அதனை ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள சந்திப்பின் போது மலையக பிரிதிநிதிகளும் வலியுறுத்த வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: