மற்றுமொரு கோவிட் அலை ஏற்படும் ஆபத்து – மக்களுக்கு சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை!

Wednesday, February 17th, 2021

நாட்டு மக்கள் சுகாதார ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்டால் நிச்சியமாக இன்னும் ஒரு கொவிட் அலை ஏற்படும் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கமைய மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார பிரிவு எச்சரித்தள்ளது.

தற்போது பிரித்தானியாவில் பரவும் புதிய மாறுபாடுடைய கொவிட் 19 வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில்  கொழும்பு நகர சபை எல்லைக்குள் இந்த கொவிட் வைரஸ் தொற்றிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து நிலைமை ஆபத்தாகியுள்ளது.

பிரித்தானியாவில் பரவிய கொவிட் மாறுபாடு தொற்றிய நபர்களுக்கு அருகில் செயற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது வரையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, PCR பரிசோதனை முடிவுகள் தாமதமாகி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. PCR முடிவுகள் தாமதமாகும் நிலைமைக்கு மத்தியில் சரியான தரவுகள் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய ஆபத்தை அறிந்து கொண்டு அதற்கமைய திட்டமிடுவது கடினமாக உள்ளதென சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: