மறு அறிவித்தல் வரை ருஹுணு பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

Wednesday, July 10th, 2019

மறு அறிவித்தல் வரும் வரை ருஹுணு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வௌியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related posts: