மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Tuesday, May 30th, 2017

நாட்டிலேற்பட்டுள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் மறு அறிவித்தல்வரை தமது சொந்த இடங்களுக்கு செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களை சேர்ந்த 464477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 88 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் 102 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: