மர முந்திரிகை கூட்டுதாபனத்தில் வேலைவாய்ப்பு!
Wednesday, March 8th, 2017
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மன்னார் சிலாவத்துறை கொண்டச்சியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
அந்த வகையில், விண்ணப்பதாரிகள் 18 இலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பது அவசியமாகும். பணியாளர்கள் நாளொன்றிற்கு 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதுடன் நாள் வேதனமாக பணியாளர் ஒருவருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.
மேலும், பணிக்கமர்த்தப்படும் தொழிலாளர்கள் ஊழிய சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிற்கு உள்வாங்கப்படுவதோடு, முசலி பிரதேச செயலக பிரிவில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணிக்கமர்த்தப்படும் தொழிலாளர்கள் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் குறிப்பிடப்படும் காலப்பகுதிவரை தொடர்ச்சியாக பணியாற்றி தமது தொழில் தகமைகளை கூட்டுத்தாபனம் திருப்தியடையும் வகையில் நிருபிக்கும் பட்சத்தில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிரந்தர தொழிலாளர்களாக எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் 13.03.2017 அன்று அல்லது அதற்கு முன்னதாகவோ ஜீனைது முகம்மது றிஸ்வி 0767317796, ஏ.சமீயூ முகம்மது பஸ்மி 0777238659, பெணான்டஸ் கூஞ்ஞா 0715994092 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|