மரண தண்டனைக் கைதிகளில் 7 தமிழரின் பெயர் விவரப் பட்டியல் நீதி அமைச்சுக்கு!

Thursday, July 19th, 2018

மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழர்கள் ஏழு பேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன.

2003 ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள  சிவனேசன் ராஜா, 2012 ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எஸ்.புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன் மற்றும் 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட டபிள்யூ.விநாயகமூர்த்தி மற்றும் எஸ்.ஏ.சுரேஸ்குமார் ஆகியோரே மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள கைதிகளாவர்.

Related posts: