மரக்கறிகளின் விலை உயர்வு.!

Wednesday, May 25th, 2016
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் மலையகத்தின் ஹட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பகுதியில் மரக்கறி பயிர்செய்கை வீழ்சியடைந்துள்ளதால்  தம்புள்ளையிலிருந்து மலையக நகரங்களுக்கு மரக்கறிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் நுவரெலியா, வெளிமடை, வெள்ளவாய, பண்டாரவளை பகுதிகளிலிருந்தே குறிப்பிட்ட அளவிலான மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடிக்கின்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
சகல மரக்கறி வகைகளும் 160 ரூபாய்க்கு மேல் விலையேற்றம் பெற்றுள்ளதுடன் போஞ்சி ஒரு கிலோ 270 ரூபாய், கறிமிளகாய் ஒரு கிலோ 280 ரூபாய், கரட் 1 கிலோ 200 ரூபாய், தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்

Related posts:


ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச...
இலங்கையில் மூன்று புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஏற்பாடு - பெற்ரோலிய கூட்டுத்தாபனம்!
பயணக் கட்டுப்பாட்டால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளன - இன்றுமுதால் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப...