மயங்கி விழுந்தவர் சாவு – சாவகச்சேரியில் பரிதாபம்!

Sunday, January 20th, 2019

சாவகச்சேரி நகரப் பகுதிக்குச் சென்ற குடும்பத் தலைவர் வழியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி உதயசூரியன் சாலையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதே இடத்தைச் சேர்ந்த கிட்டினன் செல்வம் (வயது 53) என்பவரே உயிரிழந்தவராவார்.

1992 ஆம் ஆண்டு சாவகச்சேரி பொதுச்சந்தையில் உலங்குவானூர்தி நடத்திய வான்வழித் தாக்குதலின்போது கண்ணில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அது தொடர்பான இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக தென்மராட்சி பிரதேச செயலகம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்குப் பல தடவைகள் அலைந்த போதிலும் இழப்பீடு கிடைக்கவில்லை எனவும் எறிகணைத் தாக்குதலில் கண்ணில் காயமடைந்த காலம் தொடக்கம் அடிக்கடி வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்று மாலை சந்தைக்குப் புறப்பட்டுச் சென்ற வேளையில் வழியில் வலிப்பு எற்பட்டு மயங்கி வீழ்ந்ததாகவும் அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சாவடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது என்று உறவினர்கள் குறிப்பிட்டனர்.

Related posts: