மயக்க மருந்து தெளித்து பேருந்தில் நகை திருட்டு!

Thursday, March 1st, 2018

பஸ்ஸில் பயணித்த முதியவருக்கு மயக்க மருந்து தெளித்துவிட்டு நகையும் பணமும் அபகரித்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

5 ஆம் வட்டாரம் மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த முதியவரின் 4,000 ரூபா பணமும் கையில் இருந்த மோதிரமும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது. மயக்கமடைந்த முதியவர் யாழ்ப்பாணம் வந்து இறங்கிய போதே நகையும் பணமும் அபகரிக்கப்பட்ட விடயம் தெரிந்ததுடன், வைத்திய சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

மண்டைதீவுப் பகுதியினைச் சேர்ந்த முதியவர் புதுக்குடியிருப்பு சென்றுவிட்டு மதியம் யாழ்ப்பாணத்திற்கு திரும்பினார்.

இதன்போது இவருக்கு அருகில் உள்ள இருக்கையில் இருந்தவர் கதை கொடுத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில் தான் மயக்கமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related posts: