மன விரக்தியில் 39 வயது  குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை

Tuesday, May 23rd, 2017

தொழில் வாய்ப்பும், நிரந்தர வருமானமுமின்றி வாழ்ந்து வந்த 39 வயது குடும்பஸ்தரொருவர் மன விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(22) காலை கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  தொழில் வாய்ப்பின்மையால் கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த குடும்பஸ்தர் நேற்றைய தினம் வீட்டில் யாருமில்லாத வேளையில் கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்துக் கோப்பாய்ப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.  இந்நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts: