மன்னார்  வீதி விபத்தில் ஆறுகால்மடம் பகுதி  இளைஞன் பலி!

Tuesday, September 13th, 2016

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இன்று (13) காலை இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த தவராஜா நிரோசன் (வயது-20) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னாரில் இருந்து   யாழ் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது நாயத்து வழி பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து  விபத்திற்குள்ளாகியது.

இதன் போது குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுக்கு உள்ளானர். -உடனடியாக அப்பாதையூடாக வந்த முச்சக்கர வண்டியில் குறித்த இளைஞன் ஏற்றப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த இளைஞன் உயிரழந்தார். குறித்த சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது . விபத்து தொடர்பான விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

42610874images

Related posts: