மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்!
Friday, March 23rd, 2018
மன்னார் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அறுவடை இடம்பெறும் வரை மாவட்டத்தில் உரிய மழை இன்மையினால் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர். எனினும்தமது நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் காணிகளினுள் குழாய்க்கிணறுகளை அமைத்து பயிர்களுக்கு நீர் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் முயற்சியினால் செய்கை வெற்றியளித்துள்ள நிலையில் நெல் அறுவடையினையும் ஆரம்பித்துள்ளனர். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொண்ட செய்கையில் 55தொடக்கம் 58 மூட்டைகள் வரை நெல் கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு தென்பகுதியில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் உரிய விலைக்கு கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|