மன்னாரில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு!
Thursday, February 15th, 2018
மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மன்னார் – தலைமன்னார் பகுதிகளில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினால் அமைக்கப்பட்ட “லிங்கேஸ்வரர்” தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச்செல்லப்பட்டள்ளது.
மேலும் குறித்த ஆலயத்தினுள் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட சிவலிங்கம், புத்தர் , பிள்ளையார் ஆகிய மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதியில் அமைந்துள்ள 18 வருடங்களாக சீர் செய்யப்படாத பிள்ளையார் சிலையும் இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்-தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக பல தடவைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையும் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று மன்னாரில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டமை மற்றும் அங்கிருந்து திருடிக்கொண்ட செல்லப்பட்டமை மன்னார் மாவட்ட இந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் மன்னார் மாவட்ட சர்வ மத தலைவர்கள் குறித்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|