மனித உரிமை மீறல்களில் மூன்று மாகாணங்கள் முன்னிலையில்!
Wednesday, April 5th, 2017முதலாம் தர அனுமதி தொடர்பில் மனித உரிமை மீறல்களில் மேற்கு, மத்தி மற்றும் தென் மாகாணப் பாடசாலைகள் பட்டியலின் உயர் நிலையில் உள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் குழுவின் தலைவி டொக்டர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும், இந்தப் பாடசாலைகளில் சிலவற்றுக்கு எதிராக, திரும்பத் திரும்ப முறைப்பாடுகள் கிடைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு எதிராக இவ்வருடம் மாத்திரம், 80 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளை விசாரித்த பின்னர், கல்வியமைச்சருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பாடசாலைக்கும், தனித்தனியாக விசாரணைகள் நடைபெறுகின்றன.
அநேகமாக மனித உரிமை மீறல் முறைப்பாடுகள், பொலிஸ், கல்வி மற்றும் நிர்வாகத்துக்கு எதிராகக் கிடைக்கப்படுவதாக, டொக்டர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அல்லது நிர்வாக மட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் உரிமை மீறல்களுக்கு எதிராகவே, மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|